உறுப்பினர் கூத்திசை நடிகை புனிதமலர் அவர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார்.
29.09.19.பாரிஸ் 4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினர் கூத்திசை நடிகை புனிதமலர் அவர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார்.
„கலைஞர்கள் களை காப்போம் கலையை வளர்ப்போம் „என்று பாரிஸ் பாலம் படைப்பகமும் அவரை வாழ்த்துவதில் பேரானந்தம் பெறுகிறது.
பிரான்ஸில் வாழும் மேடை நாடகம்,நீள்படம், குறும்படம், என தனது கலைப் பணியை ஆற்றிவரும் பாரிஸின் மூத்த நடிகைகளில் ஒருவரான ஈழத்தமிழ் விழி புனிதமலர் அவர்கள்
பாரிஸில் நடைபெறுகின்ற 4வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில் 29.09.19.கௌரவிக்க படவுள்ளார்.
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினரான இவர் ஏற்கனவே பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் ஈழத்தமிழ்விழி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது நீங்கள் அறிந்ததே 29.09.19 பாராட்டு பெறும் புனிதமலர் அவர்களை உங்களுடன் இணைந்து வாழ்த்துவதில் பெரும் உவகை அடைகிறோம்.
இவ் ஒளிப்படம் லண்டனில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழாவில் அவர் நடித்த „நிசப்தம் „நாடகத்தின் ஒளிப்படம்.
„உலகெங்கும் நம்மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் „(K.P.L )