யாழ் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாக்கி
நெதர்லாந்தை வாழ்விடமாக்கி வளர்ந்தவர் சௌமி ஈஸ்வரன்.இவர் ஓர் கலைக்குடும்ப வாரீசாவார்.தந்தையார் இலங்கை வானொலிப் புகழ் நாடகக் கலைஞராவார்.
சிறுவயதிலேயே புலம் பெயர்ந்து வந்த சௌமி கல்வியிலும் கலைகளிலும் கற்றுத் தேர்ந்தவராகின்றார்.பாடல் துறையில் மிக ஈடுபாட்டுடன் சிறந்து விளங்கும் காலத்தில் தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பாவுடன் இனணந்து பாடி பெருமை சேர்த்துக் கொண்டார்..
முறைப்படி பரதநாட்டியம் சங்கீதம் என கற்க தொடங்கியவர் திருமதி ஜெயந்தி யோகராஜாவிடம் தனது ஆடல் கலையை கற்று அவர் முன்னிலையில் அரங்கேற்றமும் கண்டார்.பல தேசிய மாவீரர் எழுச்சி நாட்களில் தனது பரதக் கலையால் விடியலுக்கு மூச்சு கொடுத்தவர் கொடுத்தும் கொண்டிருக்கின்றார்.
இசைமீது கொண்ட நாட்டத்தால் வீணா கற்றுக் கொண்டதும் சிறப்பாகும்.தான் கற்றுக் கொணடவை தன்னோடே நின்று விடக் கூடாதெனும் பெருநோக்கால் இன்று தான் வாழ்ந்து கொண்டிருக்கும் பெல்ஜியம் நகரில் சாகித்திய சாதனாலயா எனும் நடனப் பள்ளியை நிறுவி பல சிறார்களுக்கு முழு நேர நடன ஆசிரியையாகத் திகழ்வது கண்கூடு.
கடந்த வருடம் தனது நடனப் பள்ளியின் ஓராண்டு நிறைவு விழாவில் பரிஸ் கலைஞர்களாகிய எம்மையும் அழைத்து கௌரவித்தமை மறக்கமுடியாத நினைவில் நீள்கின்றது. இனிய துணைவனின் துணையோடு கலையை வளரப்பதனை பணியாக்கியுள்ளமை சிறப்பு..
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் தனது பிள்ளைகயைும் கலைத் துறையில் ஈடுபடுத்தியுள்ளார்.
கலைப் பணி என்பதும் இறைபணிக்கு ஒப்பானது… கூடவே மண்ணையும் மக்களையும் மனதிலிருத்தி இவர் பணி ஓங்குவது கடமையுமாகின்றது.இத்தகைய கலைஞர்களை பாராட்டி ஊக்கமளிப்பது நமது கடமையாகும். வாழ்த்துக்கள் வெற்றிகளுக்கு உரமாகட்டும் வாருங்கள் உறவுகளே ஸ்ரீமதி சௌமி வசந்த் வாழ்வில் உச்சம் தொட வாழ்த்துவோம். வாழிய வாழியவே.