கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் கவிதைத்தொகுதி வெளியீடு


கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் என்னும் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா அண்மையில் ( 2019.08.14) தென்மராட்சிக் கலைமன்றக் கலாசார மண்டபத்தில் தென்மராட்சிக் கல்வி வலயத் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அலுவலர் .க.க.ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மங்கள விளக்கினை முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சஜந்தன்இ றிபேர்க் கல்லூரியின் முன்னாள் அதிபர் க.அருந்தவபாலன்இ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் இ.கைலைநாதன்இ சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் இ.அன்ரனிஇ கவிஞரின் பெற்றோர் மற்றும் துணைவி சிவாஜினி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

சங்கீத ஆசிரியை திருமதி சுந்தரவல்லி ஆனந்தராஜாவின் மாணவியான திருமதி ய.கிருத்திகா அவர்கள் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைத்தார்.

வரவேற்புரையினை திருக்கணித பதிப்பக முகாமையாளர் திரு.கா.சிவஞான சுந்தரம் அவர்கள் நிகழ்த்தினார்.

வெளியீட்டுரையினை தென்மராட்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கு.ரஜீவன் நிகழ்த்தினார்.

நூலினை செல்வராஜா இரத்தினபூபதி தம்பதிகள் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியை சட்டத்தரணி கேசவன் சஜந்தன் பெற்றுக் கொண்டார். இணைப்பிரதிகளை குகன் ஸ்ரூடியோ உரிமையாளர் லயன் வ.சிறிபிரகாஸ்இ இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ் பிராந்தியப் பணிப்பாளர்.கி.கந்தவேள் மற்றும் தென்மராட்சிப் பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர் க.ரஜனிகாந்தன் சார்பாக அவரது பிரதிநிதியும் பெற்றுக் கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை பருத்தித்துறை பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலரும் கவிஞருமான பெரிய.ஐங்கரன் நிகழ்த்தினார்.

நிகழ்வுகளைப் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி அலுவலர் வி.விஜயரூபன்(விக்கி) தொகுத்து வழங்கினார்.

கவிஞர் செ. சுதாகரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய மரபுக் கவிதைப் பயிலரங்கில் கவிஞர் சோ. ப. மற்றும் கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோரிடம் யாப்பிலக்கணத்தை வரண்முறையாகக் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.