தாய்மண்ணில் 11.08.19 அன்று மூத்த கலைஞர் சிறிஅங்கிள் தலமையில் பாரிஸ் பாலம் படை-ப்பகத்தால் 7,மூத்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்ப-ட்டார்கள். கலைஞர்களை காப்போம் கலையைவளர்ப்போம் என்ற திட்டத்துக்கு அமைவாக பாரிஸ் பாலம் படைப்பகம் தாயகத்தில் கலைப்பணியாற்றிய முதுபெரும் கலைஞர்களை கண்டறிந்து. அவர்களை மதிப்பளித்து அவர்களுக்கான சிறிய அன்பளிப்பு தொகையை வழங்கி வருவதை ஏற்கனவே எமது பதிவுகளூடாக நண்பர்கள், நண்பிகளுக்கு அறியதந்திருந்தோம்.
அந்தவகையில் 23.03.19.அன்று எமது முதல் மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது
ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ் பாடலுடன் 250 க்கு மேற்பட்ட பாடல்களை எழுதிய பெருமைக்குரிய திரு.மாயவதாஸன் (செல்லக்குட்டி) ஐயா அவர்களும்.
05.05.2019 அன்று நாட்டுக்கூத்து மூத்த கலைஞர் திரு.பழனி தம்பு அவர்களும் பொன்னாடை போர்த்தி சிறிய அன்பளிப்பு தொகையும் வழங்கி பாரிஸ் பாலம் படைப்பகத்தால் மதிப்பளிக்கப்பட்டார்கள்.
அதேபோன்று 11.08.19 அன்று யாழ் கரவெட்டி வாழ் 7 மூத்த கலைஞர்கள் எமது பாரிஸ் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினரும் மூத்த கலைஞருமான சிறிஅங்கிள் அவர்கள் தலமையில் எமது தாயக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் மூத்த கலைஞர்களுக்கு முதன்மை உறுப்பினர் சிறிஅங்கிள் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு எம்மால் வழங்கப்படும் சிறிய
அன்பளிப்புத் தொகையையும் கையளித்தார்.
சிறப்பான விருந்தோம்பலுடன் அவர்களின் கலைஅனுபவங்களும்,சிறப்புக்களும் பேசப்பட்டதோடு
பாரிஸ் பாலம் படைப்பகத்தின் தாயக கலைஞர்கள் கௌரவிப்பு இனிவரும் காலங்களில் பரவலாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுமென்று சிறிஅங்கிள் அவர்கள் தனது உரையின் போது தெரிவித்தார்.
அந்த நிகழ்வின் ஒளிப்படங்கள் சில;;
இன்னும் பல விபரங்கள் அடுத்து வரும் பதிவுகளில் அறிந்து கொள்ளலாம். நன்றி K.P.L)