07.07.2019 ( ஞாயிற்றுக்கிழமை) சுவிஸ் மாநாட்டில் „சுரலய இசைப்பள்ளி“ நிர்வாகத்தினரால் “ தாகம் “ இறுவெட்டும், நூலும் மிக விமர்சையாக வெளியீடு செய்யப்பட்டது. இசைப்பள்ளி ஆசிரியர் திரு.இரா.செங்கதிர் அவர்களின் கடின முயற்சியினால் இசைப்பள்ளி மாணவர்களின் குரலினால் தாகம் இறுவெட்டு வெளியீடு கண்டது. மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம், தாயகப்பாடல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தொடர இசைத்தட்டு வெளியீட்டுரையினை கி.த.கவிமாமணி அவர்கள் உரை நிகழ்த்தினார்.தொடர்ந்து „தாகம் “ இசைத்தட்டு பலநூறு மக்களின் கைதட்டல்களுடன் வெளியீடு கண்டது.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக சூரிச் விஷ்னு துர்க்கை அம்மன் ஆலய குரு. சிவஸ்ரீ.சரவணபவானந்த குருக்கள், பேண் ஞானலிங்கேஸ்வர ஆலய திரு.சசி ஐயா, கி.த.கவிமாமணி, யேர்மனி GTV இணைப்பாளர் திரு.சிவலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் முக்கியமாக இறுவெட்டில் உள்ள பாடல்களே நிகழ்வுகள் அனைத்திலும் அடங்கியிருந்தமை சிறப்பே. இவ் நிகழ்விற்கு தழிழ் பள்ளி ஆசிரியர்கள், போராளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்… விழா அனைத்தையும் மிகவும் திறம்பட மூத்த அறிவிப்பாளர் திரு.முல்லை மோகன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்…