சிந்தையில் பிறந்த எந்தன்
சித்திரப் பெண்ணே உந்தன்
சிந்தாமணிக் கண்களினால் நீ
சிந்திய சரசமொழி கண்டுமே
சிந்துகள் பாடுதடி எந்தன்மனம் .
*
சினம் கொண்டு உனை நோக்கி
சீறிப் பாய்ந்து வரும் வேகமிகு
சிங்கத்தை கூட உந்தன் ஒரு
சிணுங்கல் பார்வையால் மெல்ல
சீற்றம் தணிக்கும் நல்ல
சிலுமிசக்காரி நீயன்றோ .
*
சிந்தனையில் என்றும் தோன்றாத
சிலவற்றை நானிங்கே சொல்லட்டுமா?
சின்னமணிக்குயிலே , எந்தன் சொற்கள்
சிலவேளையுனக்கு பிடிக்குமோ? இல்லை
சீ,, என்று என்னை வெறுத்திடுவாயோ ?
சீவனே நீயடி என்னை கொன்றிடாதே.
*
சித்திரமே உன்னெழிலை மறைக்குமந்த ,
சிற்த்திரையை விலக்கிடாதே ,உன்போல
சிலை வடிக்க மறந்தோமே என வெக்கித்து
சிற்பிகள் எல்லாம் தற்கொலை செய்திடுவர்.
*
சிரிக்கும் போது செல்லமாய் உந்தன்
சிங்காரக் கன்னங்களில் தோன்றும்
சின்னக் குழிகளுக்குள் விழுந்து நானும்
சீவனை விட்டுவிடத்தோணுதடி கண்ணே.
*
சிவந்த உந்தன் செவ்வதரங்களை
சிரத்தையின்றி நீயும் விளையாட்டாய் ,
சீண்டும் கிளிகளிடம் காட்டிடாதே-அவை
சின்னாபின்னாமாக்கியே உன்னிதழை
சீரழித்திடும் தன் தீனி என்றெண்ணியே.
*
சிறப்பாய் உனக்கமைந்த எழில்மிகு
சிகரமிரண்டின் செழிப்பால்த்தானோ .
சிற்றிடை உனக்கு தேய்பிறையாகி.
சிலையாய் நீயும் அமர்ந்திருந்தாயோ .
___
மாயா நேசன்