அழகென்பது..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

பூவுக்கும் பொட்டுக்கும்
சமூகக் கட்டுக்கும்
ஆயுள் கைதியாகி
வாழ்வைச் சுருக்கிடாது
நிமிர்பவர் வதனம்
என்றும் பேரழகு.!

வையத்தில் மையம்
கொள்ள வைக்கும் அழகு
வர்ணங்கள் ஏழினைத்
விஞ்சிய பேரழகு..!

கவிதைக்கும் கற்பனைக்கும்
கட்டுக்குள் நிற்காது.
எதுகைக்கும் மோனைக்கும்
எழுத்துக்குள்ளும் அடங்காது.
நிலையற்ற புற அழகு.!

அயலானை நேசித்தலும்
அவர் துன்பத்தில் சம
பங்கெடுப்பதும். சம தர்ம
நீதிக்குள் சமத்துவம்
காத்தலிலும் தேசத்தின்
விடியலுக்கும். சத்திய
வேள்விக்கும் சங்காரச்
சமரிலும் காத்திரமான
உழைப்பும் பேரழகு.!

இயல் இசை நாடகமெனும்
முத்தமிழில் முனைப்புடன்
இயங்குவதும் தனி அழகு.!
தாரமன பின்னரும்
தாயன்பினை தூரமாக்காமலும்
பாரமாக்காமலும் துடிக்கும்
அழகும் பேரழகு.!

அம்மனாய்!முப்பெரும்
தேவிகளாய் காளியாய்
மகமாயியாய் மகத்துவம்
கொண்ட நாமங்களுக்கு
நற் பெயர் சூடும்
நாயகிகளாய் வாழ்பவரே
என்றும் பேரழகிகள்..!