மடைதிறந்த வெள்ளமாய்
மனதினுள் கேள்விகள்…
மாண்டவர் நினைவினுள்
மாலையாய்க் கேள்விக் கணைகள்!
பயமின்றி வாழ்ந்தோம்
பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய்
கனவுகளோடு கட்டிளம் காளைகள்
கனவுகள் பலிப்தற்காய் காலத்தின் கட்டடாயம்.
ஊரும் உறவு ஒன்று சேர
ஒன்றுக்கொன்று உறவாடி மகிழ
அவரவர் வாழ்வு இனிமையாக
ஆலயத்திருவிழாக்களும் ஆரவாரமாகும்.
இடையிடையே இரையும் ஊர்திகள்
கொட்டிய குண்டுகள் ஆங்காங்கே
அதிலும் மீள்வோம் அன்பு உறவுகளுடன்தான்
அதுவும் கடந்து போனது அழுகையாய்.
கானமழைபொழிந்த கரிகாலன் தேசத்தில்
கடுகிய நேரத்தில் கருகின யாவும்
மின்னலென தாக்கிய வியூகத்தில்
மின்னாமல் முழங்காமல் பறிபோனது எம்மவர் வாழ்வு
உடல்கள் கருகின உயிர்கள் குவிந்தன
அங்கங்கள் சிதறின ஆங்கே குருதியாறே ஒடியுது
ஓடியவர் ஓட மாண்டவர் மாள
இருந்தவர்கள் யாவருமே காற்றடைத்த பொம்மைகள் !
நிழலான காவல் தெய்வங்களை தொலைந்தன
நிர்கதியான நிலையில் உறவுகள்
உணர்வூட்டிய காலநதியென வாழ்ந்தவர்களும்
கண்காணா கலந்தனர் மண்ணோடு.
குடும்ப அமைப்பு குலைந்தது
குறைந்தபட்ச அன்பும் விலையானது
நிம்மதி எங்கே பாடல் நினைவுகளில்
நீண்டும்காலம் மாண்டுபோகவில்லை
தமிழராய் வாழ்ந்து தொலைநதிகளை தேடுகிறோம்.
கவிச்சுடர் சிவரமணி
திருகோணமலை.