நீண்ட காலமாக எழுத்துலகில் பிரவேசித்து வந்தாலும் , அதற்கான அடித்தளமாக நான் எதனையும் செய்யவில்லை . முதன் முதலாக என் கவி விரும்பிகளுக்கு சமர்ப்பணமாக எனது „உயிர் வலி“ நூல் வெளியீடு மிகப் பெரிய ஆனந்தத்தை தந்து சென்றது.
நான் அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத போதிலும் அதில் உள்ள குறைநிறைகளையகற்றி என் எண்ணம் வெற்றிபெற்று இருக்கிறது . இலக்கிய வாதிக்கு விமர்சனம் என்பது அவனை வளர்க்க ஒரு ஏணிப்படியே.
எனது உயிர் வலி நூல் வெளியீடு நிறைவு பெற்ற நிலையில் மிகுந்த வெற்றிக் களிப்பில் நான், அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
செல்லமுத்து வெளியீட்டகத்தால் வெளியீடு கண்ட உயிர் வலி…..
சிறந்த சமூகப்பற்றாளன் இலக்கிய வாதி யோ புரட்சி. எனது பிறந்தநாளில் வெளிவர வேண்டும் என்ற ஆசைக்கு. மிகக் குறுகிய காலப்பகுதியில் சிறப்பான நூல் பற்றிய சகல வேலைகளையும் ஏற்றுக்கொண்டு. வெளியீடு சம்மந்தமான நிகழ்வுகளையும் தானே முன்னின்று அழைப்பிதல் நேரிலும் தபால் மூலமும் சிரமங்கள் பாராது அனுப்புதல் முதல், விழா ஒழுங்கமைப்பு, ஒளி ஒலி ஒழங்கமைப்பு, நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு , இதர பல எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து. சொன்ன நேரத்திற்கு விழாவினை ஆரம்பித்து விழாவிற்கு வந்தவர்கள் சளைக்காத வண்ணம் குறிப்பிட்ட நேரத்தில் விழாவினை நிறைவு காணச்செய்து, மிக திறம்பட நேர்த்தியாக விழாவினை நடத்தி தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் யோ புரட்சி அவர்களுக்கு.
தோளோடு தோள் நின்று என் உயிர் வலி நூலின் வெளியீட்டுக்கு நான் இல்லை என்ற குறையகற்றி அனைத்து வகையிலும் உதவிகள் செய்த எனது உடன் பிறவா சகோதரன் கவிஞர் கடலூரான் சுமனுக்கு நன்றி கூற மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் ,
கவிஞர் திரு மாணிக்கம் ஜெகன், அண்ணா அவர்கள் எனது வெளியீடு நிகழ்வின் தலைமையினை ஏற்று திறம்பட நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கி குறிப்பிட்ட நேரத்தில் மிக சிறப்பாக செய்தமை மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
எனது அழைப்பை ஏற்று கௌரவ திரு சிவகச்சி ஆனந்தன் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் .நேரப்பற்றாக்குறையிலும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமைக்கு எனது உளமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறப்பு அதிதிகளாக வவுனியா மாகாவித்தியாலய அதிபர் திரு அமிர்தலிங்கம் அவர்களும், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு திருஞானசம்மந்தமூர்த்தி அவர்களும், வடமராட்சி பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு சிறிகரன் அவர்களும், எனது ஆசிரியை சத்தியவாணி சென் ஹென்றி கல்லூரி இளவாலை பிரதி அதிபரும், நிர்வாக கிராம அலுவலகர் திரு ஞானேஸ்வரன் அவர்களும். அதிபர் முத்தையன்கட்டு வலதுகரை பாடசாலை அவர்களும் கலந்து சிறப்பித்தமையும், எனது ஆசிரியை சத்தியவாணி அவர்கள் உயிர் வலி நூலுக்கான வாழ்த்துரையை வழங்கி இருந்தமைக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் அனைவருக்கும் .
எனது விழாவிற்கான மண்டபத்தினை ஒழுங்கமைத்து தந்த உயிரிழை நிர்வாகத்தினருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். ஆசியுரை வழங்கிய சகோதரி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எனது உயிர் வலி நூலுக்கான வாழ்த்து மடல் வழங்கி சிறப்பித்த திரு கண்ணன் தமிழ் விருட்சன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மற்றும் கவிஞர் திரு வன்னியூர் செந்தூரன் வாழ்துரை வழங்கி விழாவை சிறப்பிருத்தமைக்கும் எனது நன்றிகள். மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்த அனைத்து பெருந்தகைகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்,
எனது நூலாய்வினை வழங்கிய கவிஞர் சமரபாகு சினா உதயகுமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் என் நிகழ்வில் கலந்து சிறப்பித்த என் நண்பர்களை கவியுலக கவிஞர்கள் ,சொந்தங்கள், எனது சகோதரிகள் பிள்ளைகள். திசைநிலா என் நூலுக்காக வேலைப்பழவிலும் பெரும் பங்காற்றி இருந்தார். அதனைவிட மகள் நயனியா வின் வரவேற்பு நடனம் மிக திறம்பட இருந்தது. அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.
புகைப்படக் கலைஞர்கள் , இணைய உரிமையாளர்கள். கருத்துக்கள் வழங்கிய சக தோழர்கள், விஜய் அச்சக பணியாளர்கள், சிற்றூண்டி வழங்கிய உயிரிழை பணியாளர்கள் , எனது அண்ணா மகன் தனு அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகளும் வணக்கங்களும்
மற்றும் நன்றி தெரிவிக்க தவறியிருப்பின் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த கோடி நன்றிகள்.
ஜெசுதா யோ