வரலாற்று பதிவுகள் என்றும் அழியாதவை அந்தவகையில் 70வது களில் பிரபலியமான இசைக்குழுவாக எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ் இசைக்குழுவானது மிகபிரமாண்டமாக பரிநமித்த திருகோணமலையில் வந்துதித்த இசைக்கலைஞர்கள் தான் எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ்
இவர்கள் தங்களுக்கான தளத்தை தனித்துவமாக்கி திசை எங்கும் மக்களை தங்கள் வசமாக்க பிரமாண்டமான இசை நிழ்வை தாயகம் முழுவதும் வழங்கி அந்த வளர்ச்சியின் வேகத்தில் ஈழத்தின் இசையுலகின் சரித்திரம்படை த்து முதல் இசைத்தட்டை உருவாக்கி தம்மாலும் எமக்கான சொந்த படைப்பு மூலம் தலை நிமிர முடியும் என அண்ணர் பாட்டெழுத தம்பி இசையமைக்க ஈழத்தில் பட்டி தொட்டி எங்கும் இரசிகர்களை துள்ளவும் கிள்ளவும் வாய்களில் முணு முணுக்க வைத்த பாடல்களாக அமைந்தது
அன்று இசையமைப்பாளர் எம்.பி.கோணேஸ் இசையமைக்க எம்.பி.பரமேஸ் பாடல் எழுதிய இசைத்தட்டுகளின் சில நிழல் படங்கள் எமக்கு கிடைத்துள்ளது சிறந்த முன்னோடிக் கலைஞர்கள் எம்.பி.பரமேஸ் எம்.பி.கோணேஸ் அவர்களின் இந்த பாடல்கள் ஈழத்தில் அன்று முதல் இன்றுவரை ஒலிபரப்பாகிவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது அத்தோடு அன்றய இசைத்தட்டின் நிழல் படத்தை உங்கள் பார்வைக்குதருவதையிட்டு மிக மகிழ்வு கொள்வதோடு ஈழக்கலைத்தாயின் புகழ்வாழ இவர்பணி தொடரட்டும்