குருதி காயாத நிலம்
குற்றுயிராய் கிடக்கும் தெருக்கள்
உறுதி சாயாத நம்பிக்கைகள்
வாழ்ந்து விடுவோம் என்ற தைரியம்
இவற்றையெல்லாம் தாங்கிய
சிதிலமான தாய் நிலமும்
பெரும் நெருப்பில் புதைந்து
வளங்கள் அத்தனையும் இழந்து நிற்கின்றது,
எப்படியும் எழுந்து விடுவோம்
என்ற வீரியத்தில்,
காயப்பட்ட தாய் நிலத்தை
காக்க கடைசிவரை
கண்ணீர் வற்றிய விழிகளுடன்
காப்பெடுத்தோம்,
இறுதியில் உப்புக்காற்றில்
கலந்து போனது எங்கள்
தாக வேட்க்கைகள்,
ஆயினும்
உலகமெங்கும் வியாபித்து
நிற்பதாய் உணர்கின்றோம்,
உறவுகளே உங்களை இன்னும்
தங்கி கொண்டுதான் இருக்கிறாள்
பூமித்தாய்
நசுக்கப்பட்ட தன் இனத்தின் கதறல்
பேரிரைச்சலுடன்
ஆர்ப்பரிப்பதுக்கொண்டே இருக்கு சிதிலமாக்கப்பட்ட அவள் தேகத்துக்குள்,
தே. பிரியன்1