11/10/2017 அன்று சனிக்கிழமை வானவில் நடாத்திய 17 வது ஆண்டுவிழா டென்மார்க் கோசன்ஸ் நகர மாபெரும் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
டென்மார்க்கின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் மாணவர்கள். பெற்றோர்கள். பழய மாணவர்கள்
என மண்டபம் நிறைந்த ஐனத்துடன்
சரியாக நண்பகல் 1.30 க்கு ஆரம்பமான விழா மாலை 18.00 மணிக்கு நிறைவடைந்தது.
வானவில் கல்லூரியின் மாணவர்களின் கலை நிகழ்வுகள்
நடனங்கள். ஆங்கில உரைகள்.
மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் பல காண்பிக்கப்பட்டன
அதில் முதலாம் இடம் .மற்றும் இரண்டாம் இடம் holbæk. நகர மாணவர்கள் பிடித்து கொள்ள
3 ம் இடம் vejle நகர மாணவர்கள் பிடித்துக் கண்டார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் களும் கேடயங்களும் வழங்கப்பட்டன
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில மொழி பரீட்சையில் சித்தியடைந்து 2017 ம் ஆண்டு வெளியேறிய மாணவர்களுக்கு பட்டமளிப்பும் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக இயக்குனர். கீ.சே.துரை அவர்களின் சிறப்புரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
திரு கார்த்திக் மனோகரன் கடந்த 17 ஆண்டுகளாக நேர்த்தியாக நடாத்தி வருகின்ற இந்த கல்லுரி புதிய புதிய நகரங்களிலும் புதிய புதிய வகுப்புக்களை ஆரம்பித்துக் கொண்டு வீறு நடை போடுகின்றது இந்த விழாவைக் கூட அவர் தான் பின்னின்று மாணவர்களைக் கொண்டே நகர்த்தி சிறப்பித்தார் .
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். * திருக்குறள் )
பல பெற்றோர்களின் முகத்தில் அகத்தின் அழகை காணக் கூடியதாக இருந்தது .