கண்வழி வந்து புகுந்தனன்
கனிமொழி பேச வைத்தனன்
கண்மணியென்றழைத்து காதோரம்
கம்மலின் அசைவில் கவிதை பகன்றான்.
காற்றினில் கருங்குழல் அசைவினில்
கருமேகத்தின் அழகைகண்ட கள்ளன்
காந்தள்மலர்க்கைதொட்டு கனிரசமாய்
கம்பனை விஞ்சி வாய்மலர்ந்தான்..
கயல்விழிகள் இரண்டும் மையலோடு
கரும்புவில்லான் முகம் காண நாணிட
கானகத்து மூங்கில்கள் குழலிசைக்க
காதலொன்றின் சங்கமமோ..
ரதிமோகன்