நிலம் உழுதிடு மவன் நலமிங்கு தினம்
உண்ணும் பழஞ்சோறு கறியினிலே – எங்கள்
குலம் வாழ ஆழ உழுதிங்கே விதைப்பவன் கை பார்த்தே குவலயம் காத்துக் கிடக்கிறதே…
காலை வானம் கலகலத்து சிரிக்கிறதே
கந்தப்பிள்ளை மேனி களைப்பில் நிலம் நனைகிறதே
வேளை ஓய்விற்கு வரம்பிலே நின்று கூச்சலிடுபவள்
வந்தமர வேண்டி வாழையிலை போடுமவள்
வேண்டாது வந்த வரமென வேளைதனில் மனம் குளிர்ந்திடுமே..
கருவெள்ளை மாவெள்ளை காலாறுதே
கால்தனில் நின்ற கொக்கு புழு கொத்தி பறந்திடுதே
கஞ்சிப் பானை வாசம் கைதட்டி அழைக்குதே
காலையில பெஞ்சாதி கைக் குழையல் சோறு அமிர்தமாகுதே
நேரம் பார்த்திங்கே ஓடோடி வந்தே நெற்றி வியர்வை துடைத்திடும் துணையது உழவன் வாழ்வின் வரமே..
#கமக்காரன். ✍?பவளம்