தனங்களின்
மேலிருக்கை மேலெழுந்து
கீழழுந்த
ஓடிவருகிறாய் அத்திகா..!
குதிரைவாலாய் மேலெழும்
கூந்தலை கோதிய கணத்தில்
தாவிடும் பாச்சலில்
என் இடை
உன் இருக்கை…!
அணு நுளையாத் தழுவலின்
ஆதித்தாய் யார்
அந்த மகோன்னத
தருணத்தை சுகிக்கிறேன்
குளிர் வெய்யிலை
வென்றுவிடுகிறது
ஆனால் உடலுரசும்
வெப்பத்தில்
அறையில் மலரும் லாவண்டர்
பூக்களை தொடமுடியாமல்
தூரவே நிற்கிறது
தோத்தாங்கோழி குளிர்
இந்தப் பனிகாலக் குளிரிலும்
பவித்திரமகலாத
உஸ்ணத்தேனே..!
வசந்தகாலத்து வண்டுகள்
வாழ்நாளில் தவறவிட்ட
உயர்தர மதுரம்
உன் இரு இதழ்கள்
இங்குதான்
நான் சுயநலவாதியாய்
இருந்ததற்காய்
பெருமை கொள்கிறேன்..!
-அனாதியன்-