ஒரு காதல் கடிதம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

 

கன்னி (கன்னி)மடல் இது
காணாயோ கண்ணுற்று மொழியாயோ
கண்டதும் காதல் என
ஏளனமாய் நினைப்பாயோ

அன்பே உன் பார்யைில்
அன்றலர்ந்த தாமரையாய் இதயம்
தாமரையை சேவிக்க பதியாக வாராயோ
சகியாக காத்திரூக்கேன் எதிர்பார்ப்புடனே!

மல்லிகையில் பூத்த மணம்
மனம் எங்கும் அதன் வாசம்
முற்றத்து மல்லிகையோ உனக்காக
மாற்றத்திற்காக உன்வீட்டில் படரனுமாம்.

வாய்மொழி செப்பவில்லை
இதயமொழி இதமாக சொல்லியதே
மறுமொழி அனுப்பிவிடு
மங்கையெனை தவிக்கவிடாது.

மாப்பிள்ளை வேட்டையில் வீட்டார்
மருமகன் நீயென அறியாது
மருமகனாய் வருவதற்கு சம்மதம் தா
மறுதலித்தால் மண்ணோடு போகும் என்னைப்பார்.

இதயக்கதவு இரும்பாய் இருந்தது
இளகிவிட்டதே .உன்னாலே
இதயசிம்மாசனம் கொலுவேற்றிவிட்டேன்.
கொலுவேறிவிடு இல்லையேல் கொன்றுவிடு.

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி

Merken