உன்
விழிகள்
தேடும் வினாக்களுக்கு
என்னிடம்
விடையில்லை.
படைகள்
மேய்ந்த
புண்ணிய பூமியில்
குடைகளும்
சரிந்ததால்
நிழலேது.
கருணை
கலைந்து
கவலைகள்
கனக்குது இங்கே
கண்டும் காணாமல்
எல்லாமே
எண்ணப்படி..
உலகப்பந்தில்
உதையப் பட்ட
பந்தாகி
உருளும் நடைப்
பிணங்களாய் பலர்.
மனங்கள்
இறுகி இரக்கம்
மறந்து இச்சைகள்
மட்டுமே கொச்சையாகி
கொடுமைகள்
கட்டறுத்து நாளும்
காட்சிகள் விரியுது.
கவிஞர் தயாநிதி