சில பாடகர்களின் குரல் மனதை விட்டு அகலாது இல்லையா? அப்படி குரல்வளம் கொண்டவர்தான் எம்.எஸ்.ராஜேஸ்வரி அம்மா அவர்கள். குழந்தைப் பிள்ளைகளுக்கு பாடும் திறன் இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. அதேநேரம் அன்றைய சினிமாவில் நல்ல பல பாடல்களையும் இவர் பாடியிருக்கின்றார்.
கமல்ஹாசன் அவர்களுக்கே „களத்தூர் கண்ணம்மா“
படத்தில் „அம்மாவும் நீயே அப்பாவும் நீயே“ என்று பாடியவர். இவரை எனக்கு 92 ம் ஆண்டு சந்தித்து,பேசி
பேட்டி எடுக்க முடிந்தது. அன்பான ஓர் அம்மாவாக
பாட்டியாக இருந்தார். பழைய பாடல்களை விரும்பி
கேட்பவர்களுக்கு இவரின் பாடல்கள் கண்டிப்பாக பிடிக்கும்.
எனது தம்பியின் திருமணதின்போது நான் ஒழுங்கு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு
பாடினார். அது எனக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது.
இவர் பாடிய சில பாடல்கள் …
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா… – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா… – மகாதேவி (1957)
சேவை செய்வதே ஆனந்தம் – மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை… – மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்… – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்… – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா… – தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு… – படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே… – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்… – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி… – குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே… – செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா… – திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்… – மகாலட்சுமி (1979)