அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னை பையன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.