ஈழத்தை ஆண்ட மன்னன் இராவணன் தொடக்கம் இறுதியாக ஆண்ட மன்னன் பிரபாகரன் வரை ஈழக்கோன் தோன்றினான்
எல்லாளன் பண்டார வன்னியன் என ஒரு சில மன்னர்களைத் தவிர ஏனைய மன்னர்கள் எமக்குத் தெரியாமல் போனது ஏன்
காணாமல்ஆக்கப்பட்ட எமது மன்னர்களைக் கண்டறிய மனித உரிமைகளில் முறைப்பாடு செய்ய வேண்டும்
வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் கூட தமிழ் மன்னர்களைக் காண வில்லை சில தமிழ் மன்னர்கள் சிங்கள மன்னராக மாற்றப் பட்டது எப்படி
மர பணு மாற்றிய மாமரம் போலவும்
மாட்டினம் போலவும் தமிழ் மன்னர்காளுக்கும் மரபணு மாற்றியது யார்
சினிமாவிலும் வேறு மோகங்களிலும் உக்கிய கலாச்சாரத்திலும் கரைந்து போனால் நம்மை நாம் புதுப்பிப்பது எப்போது சுய பரிசோதனை செய்வது எப்போது அதற்காகவே ஈழக்கோன்
ஒரு வைத்தியன் சாத்திர சிகிச்சை செய்து நோயாளியின் உடலைச் சுத்திகரிப்பது போல் சாக்கடையாகும் சமூகத்தைப் பூங்காவாக மாற்ற கலைச் சத்திர சிகிச்சை செய்பவன் கலைஞன் அதற்காகத் தோன்றியது ஈழக்கோன்
உலகு உறங்கினாலும் உறங்க விடாமல் தடுத்து நியாயவாதிகள் கள்ள மௌனம் காத்தால் அந்த மௌனத்தைக் கலைத்து முள்ளிவாய்க்காலில் நாம் பட்ட அவாலங்காளைச் சொல்லிக்கொண்டேயிருப்போம்
அதற்காகத் தோன்றியதே ஈழக்கோன்
ஒட்டுமொத்தத் தமிழ் மன்னர்களின் தாண்டவம் சிவ பக்தன் இராவணனின் நடனம் இறுதிமன்னன் பிரபாகரனின் கோபம் இதுவே ஈழக்கோன்
அநீதீயின் சபையெங்கும் அண்டசராசுரங்களும் அதிரத் தோன்றுபவனே ஈழக்கோன்
ஈழக்கோன் இறுதிவரை தமிழ் இருபுக்காகாத் தோன்றியவாறே புன்னகைப்பான் புரட்சித் தீயாய் ஆனந்த நடனம் ஆடியவாறேஇருப்பான் உறக்கத்திலும் கூட.
– த.செல்வா-