நம்மோடு இருக்கும் உறவுகள்
எல்லோரும் நம் கூடவே வருவதில்லை …
பல பிரிவுகளை கடந்து தான் எங்கோர்
மூலையில் சிறு வாழ்கையை வாழ்கின்றோம்.
எதை நம்பி மாற்றத்திற்கு தயாராகினோமோ
அதுவே நம்மை அழ வைத்தும் விடுகிறது.
நிரந்தமாக எதையுமே நம்ப முடியாத
உலகத்திலேயே நாம் பிறந்தும் உள்ளோம்.
ஆரம்பத்தில் இருந்த அன்போடே எவரும்
கடைசி வரை நகர்வதாய் தெரியவில்லை…
ஆறுதலுக்காக தோளினில் சாய்தவர்கள்
நமக்கு வலியை தந்து விட்டு தொலைகிறார்கள்.
தேவைகளை நிறைவேற்ற பழகும் மனிதர்களிடத்திலேயே
நாம் நேசத்தை தேடி கொண்டிருக்கிறோம்.
கடைசி வரை நம்மோடு வருவேன் என்றவர்களாலே
நம்மை உயிரோடு விட்டு வைக்க தெரிவதில்லை…
விலகி போனவர்களின் விளக்கத்தை கேட்காதீர்கள்.
உங்களோடிருந்தது உண்மையான அன்பு எனில்…
பிரிவதற்கு காரணமே இருக்க முடியாது.
நெடுந்தீவு முகிலன்