இரண்டு வயதினில் யேர்மன்…
நகருக்கான வருகை….
ஆரம்ப கல்வியுடன் டச் இலக்கியம்
கற்று தேறியவர். கலை கலாச்சார
ஈடுபாட்டினால் சினிமா சார்ந்த
தொழில் நுட்ப கல்வியை தொடர்ந்த
முதல் ஈழத் தமிழ் பெண்மணியாவார்.
இவரின் வெற்றிகளுக்கு பின்னால்
துணைவன் இருந்திருக்கின்றார்.
சலசலப்பு எனும் முழு நீளப் படம்
ஒன்றினை எழுதி இயக்கி தயாரித்தவருமாவார்.தடுமாற்றம்
எனும் குறும் படத்தை இயக்கியவர்.
முள்ளும் மலரும் எனும்
குறும் படத்தில் மூத்த கலைஞர் றகுநாதன் அவர்களுடன் நடித்து பாராட்டைப் பெற்றவர்…
யேர்மன் நகரில் நவீன சரஸ்வதி.
புதிய யுகம்.அலை. சினிமா மோகம்.
என பல மேடை நாடகங்களை எழுதி இயக்கியவர்.வாழும் தளமும் சூழலும்
இவரது கலைத் தாகம் தீர்க்கவில்லை. .
அதனல் பிள்ளைகளை முழுமையாக்க
முடிந்தவரை முயற்சியிலுள்ளார்.
தமது பிள்ளைகளை முக் கலைகளிலும்
பயில்வித்து வருகின்றார்…யேர்மனிய
இசைக்குழுக்களில் வாத்தியக் கலைஞர்களாக தடம்பதித்துள்ளமை சிறப்பு.
தென் இந்திய இயக்குனர் சலோமனின்
உதவி இயக்குனராக பணி புரியும் வாய்ப்பினை வேறு பழுக்களால் இழந்தவர்.
தான் கற்ற துறையில் அடுத்த தலைமுறையினரையும் பயிற்சி பட்டறைகள் மூலம் ஊக்கம் கொடுக்கும் இவருக்கு
முறையான தளங்கள் கிடைத்தால்
சாதனைகளை நிகழ்த்தி பெருமைகளை
குவிப்பார்…இலைமறை காய்களாகி
இல்லாது போய்விடாமல் இயங்கிட
செய்தல் காலத்தின் கட்டாயமாகும்.
வாருங்கள் வாழ்த்துவோம். ஊக்கமெனும்
உரமிடுவோம்.வாழிய வாழியவே.