திருமதி க.புனிதமலர். ஈழத்தின் விழி.France.

தாயக நேசிப்புடன்
மனங்களில் சுமையுடன்
கலையின் பற்றால்
நித்தம் போராடிய கலைப் போராளி.

விடுதலை அரங்குகள்
ஐரோப்பிய வீதிகள் எங்கனும்
விடுதலைக்கு வெளிச்சம்
தேடிட உழைத்த பெண்மணி.

எத்தனை இடர் வரினும்
எத்தனை தடவை அழைத்தாலும்
ஒத்திகைக்கு பின்னிக்காத
புனிதமான பூங்கோதையிவள்.

ஐ நா முன்றலில் அமைக்கும்
அரங்கங்களிலும் அடிக்கடி
என்னோடு அரங்கேறிய
அஞ்சாத நெஞ்சக்காறி…

இயல் இசை நாடகம்
இனிதுறக் கற்று காத்தான் கூத்து
வட்டுக்கோட்டைக் கூத்தென
தன் சொந்த ஊருக்கே பெருமைகள்
சேர்த்த செம்மையானவள்..

வீடியோ நாடகங்கள்
குறும் படங்கள் என
பல்துறைக் களங்களில்
இன்றுவரை இயங்கும் கலைத் தாரகை.
இன்று தமிழர் புனர் வாழ்வுக் கழகம்
பிரான்ஸ் ஈழ விழி எனும்
அதி உயர் விருதால் கௌரவிப்பது
இவள் உழைப்புக்கான சன்மானம்.
வாழ்த்துவோம் பயணங்கள்
தடையின்றி நீளட்டும் வாழியவே.

                               கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

Merken