நமது கலைஞர்கள் S.கணேஸ்
T.ஜஸ்ரின், அகிலா, „ரோமியோ ஜூலியற்“என்ற பிரெஞ்சு படத்தில் :::
பிரான்ஸின் புறநகர் பகுதியான SAINT DENiS நகரசபையின் திரையியல் கலைக் கல்லூரியின் நிறைவாண்டு மாணவ மாணவிகள் (இயக்கம்,
நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,)
பல்லின மாணவர்கள் மாணவிகளின் ஒருங்கிணைவில் தயாராகிவரும் ரோமியோ ஜூலியற் „என்ற பிரெஞ்சு படத்தில் பாரிஸ் பாலம் படைப்பக கலைஞர்கள் செவ்ரோன் S.கணேஸ், T.ஜஸ்ரின், அகிலா ஆகியோர் பிரெஞ்சு கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.
வருடா வருடம் நிறைவாண்டு மாணவர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வரிசையில் இவ்வாண்டு ஆசியா, ஐரோப்பிய கலாச்சார அம்சங்களை உள்ளடக்கி கதையை பின்னியிருக்கிறார் திரையியல் கல்லூரி பேராசிரியர் Youri TESSIER அவர்கள்.
ஆனி மாதத்தில் திரையிடப்படவுள்ள ரோமியோ ஜூலியற் „கதை இதுதான் பிரெஞ்சு ஆணை ,காதலிக்கும் ஆசிய பெண் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் இறுக்கமான திரைக்கதையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
இதில் சுவாரஸ்சியமான இன்னொரு விடயம் திரைப்படம் திரையிடல் செய்யும் வேளையில் நேரடியாக பின்னணியிசை வழங்கவுள்ளார்கள் திரையியல் இசைப்பிரிவு மாணவர்கள்.
படப்பிடிப்பின் நிறைவில் பேராசிரியர் YOURI TESSIER கூறியது எதிர்காலத்தில் பிரெஞ்சு திரைத்துறையில் சாதிக்கப்போகும் எங்கள் மாணவர்கள் ஊடாக பிரெஞ்சு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உங்களுக்கு இருக்கிறது என்று நமது கலைஞர்களுக்கு தனது ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். ஆகவே நம்மவர்கள் திரைத்துறையில் சாதனைகள் படைக்க வாழ்த்தி மகிழ்வோம்.(K.P.L) 09.03.2019