யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது..
.
நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் ஆற்றினர்.
.
தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி விபுலானந்தர் என்ற பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரனும் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை என்ற பொருளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி சி.பத்மராஜாவும் வண.தனிநாயகம் அடிகள் என்ற பொருளில் தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலை பேராயர் அதிவண. கலாநிதி சு.ஜெபநேசன் அடிகளாரும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி ஜெயலஷ்மி இராசநாயகமும் கருத்துரை வழங்கினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் ச.லலீசன் நன்றியுரை நல்கினார்.
.
நிகழ்வில் கட்டுரை வழங்கிய பேராளர்கள் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.