ஒரு குறும்படத்தின் மிக முக்கியமானது திரைக்கதை தேர்வு அதிலும் முக்கியம் அந்த கதை கரு மிக நேர்த்தியாக தெரிவு செய்தால் மட்டும் காணாது அதை திரையில் கொடுக்கும் விதம் காட்சியை வடிவமைக்கும் கலை என்பது எல்லோருக்கும் கைவருவது இல்லை அதனால் தான் ஒரு சில இயக்குனர்கள் இன்றும் எங்கள் மனக்கணக்கில் மறையாமல் இருக்க காரணம் …
இவ்வாறு ஒருவனாக ஈழ சினிமாவில் காணக்கூடியாத இருப்பவன் நோர்வே பிரசன்னா காட்சியை பேசவிட்டு மொழியை மௌனம் ஆக்கி உணர்வை தூண்டி விட்டு அட இது எங்க வீட்டு கதை அல்லது எங்களை சுற்றி உள்ள கதை என்னும் மன ஓட்டத்தை கொடுக்கும் நேர்த்தி வள வள என்று வசனங்களை அடுக்காது ஒரு சித்திர கதைபோல கொண்டு செல்லும் விதம் அருமை …
அடா என்ன ஆடம்பரம் எவ்வளவு செலவு சூப்பராக செய்தார்கள் என்று ஊரார் பேசிப்போகும் அதே தருணத்தில் ஒரு குடும்பத்தின் உள் மனநிலை அல்லது அவர்கள் குடும்ப சூழல் அதனுள் இருக்கும் பிரிவு வெளிவேஷம் போடும் புன்னகை என்று ஒரு வலியை இலகுவாக சுழற்றி விட்டு இருக்கிறது „அகம் புறம்“ புலத்தில் புன்னகைக்கும் முகங்களுக்கு பின்னால் உள்ள பெரும் சோகம், தனிமை, இழப்பு, என்பவற்றை சமூக பார்வைக்கு கொண்டுவந்து கொடுத்த இயக்குனர் சக நடிகர்களுக்கு பாராட்டுகள்.