என்னை இளந்தாரியென நானுணர்ந்த முதல்நாள்,
அந்நாளே என்வாழ்வில் நான்கண்ட பொன்நாள்.
என்னவள் என்கண்ணெதிரே தோன்றிய திருநாள்.
பெண்ணவள் யாரோ? அவள்பெயரே, தெரியாது.
முன்னாள் நடிகைகள் போலவள், மூக்கும் முழியும்.
கண்ணால் கதைகேட்டேன் அவளிடம் காலையில்,
சொன்னாள் தன்காதலை ஜாடையாய் மாலையில்.
என்இளமை இன்பமாய் இறக்கை கட்டி எழுந்து
விண்ணிலும் மண்ணிலும் முட்டாது பறந்திட
பின்னாளில் வரப்போகும் பிரிவையறியாதமனம்
கண்களைக்கட்டியே, கண்ணாம்பூச்சியாடியது.
ஜன்னலிலவள் நிற்க, ஜாடைகாட்டி நான்போவதும்,
பின்னல் ஜடையோடு அவள் பள்ளிக்குப் போவதும்,
பின்னால் நடந்துவந்து நான் கடிதம் கொடுப்பதும்,
என்னவள் நீ எனக்கில்லை என்றாகிப்போன பின்
எந்நாளிலினி கிடைக்குமந்த இனியசுகம் எனக்கும்.
கன்னியவளைப்பிரிவேனென்று கடுகளவுமறியாது,
என்கனவிலேயவளை கல்யாணம் கட்டிக்கொண்டு,
இன்பக்கனவில் இனிமைகண்ட எனக்கு,அவள்வந்து,
சொன்னாள் ஒருவார்த்தை என் நெச்சில் சுடச்சுட,
தன்னது சொந்தத்தில்தான் மாப்பிள்ளை தனக்காம்.
வெந்தணலில் புழுவாய் நானிங்கு ஏங்கித் துடிக்க
வந்த மாப்பிள்ளையோடு வண்டியில் போகிறாளே .
உன் சொந்தக்காரனாக முடியாது போனாலும்,
என் சொர்க்கமே நீ எங்கிருந்தாலும் வாழ்கவே .
காதல் நேசன்