இந்த வருடத்தின் ஆரம்ப நாளான புதுவருடத் தினமான 01.01.17 அன்று ஜேர்மனி ஓபகௌசன் நகரில் மாபெரும் ஜனரஞ்சக கலை விழாவொன்று இரசிகர்களால் மண்டபம் நிறைந்த நிலையில் நடைபெற்றிருந்து.
நடனம் இசை நாடகம்என இவ்விழா இரசிகர்களை மகிழ்வித்தது. நான்கு அறிவிப்பாளர்கள் இக்கலைவிழாற்கு அறிவிப்பாளர்களாக பணி புரிந்திருந்தார்கள்.
பல தடைகளை முறியடித்து மக்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்ற இவ்விழாவில் அற்புதமான கலைநிகழ்ச்சிகளை ஐரோப்பா வாழ் இளந்தலைமுறைக் கலைஞர்களும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் தத்தமது கலை நிகழ்வுகளை அரங்கேற்றி இரசிகர்களை மகிழ்வித்தனர்.
இக்கலைவிழாவான ‚வணக்கம் ஐரோப்பா ‚ நெஞ்சம் மறக்குமா‘ கலைவிழா இவ்வருடம் மீண்டும் 23.12.17 அன்று ஒபகௌசன் நகரில் இடம்பெறவிருக்கின்றது.
அதற்கான கலந்துரையாடல் கடந்த 10.09.17 அன்று எசன் நகரில் இடம்பெற்றிருந்தது.ஆதரவாளர், ஆர்வலர் எனவும் கலை இலக்கிய கர்த்தாக்களும் பொதுப்பணியில் ஈடுபடுவோருமாக பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற கலைஞர்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற அபிப்பராயத்தைக் கொண்டிருந்தனர்.
இவ்விழாவிற்கு தமது முழு ஆதரவையும் அளிப்பதாக இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் தெரிவித்தனர்.
தொடராக நடத்தப்படும் கூட்டங்களில் இன்னும் விரிவான செயல்பாடுகளுக்கு திட்டமிடப்படும் என இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
„க.முருகதாசன்“