ஒட்டுசுட்டான் கல்விக்கோட்டத்தில் மூத்தபாடசாலையாக அமைந்த கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 29 மாணவர்கள் சித்திபெற்றனர்.
-ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அதிகூடிய தர பெறுபேறுகளை இருமாணவிகள் (6A)பெற்றனர்.
சிவகுமாரன்–கீர்த்திகா6A,2B,C
சுந்தரமூர்த்தி–விதுசனா 6A,B,C
ஆகியோரே இப்பெறுபேற்றைப் பெற்றவர்களாவார்.
-கற்சிலைமடு அ.த.க.பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 05.04.2017 புதன் கிழமை அன்று அதாவது நேற்றைய தினம் சாதனை மாணவர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் சிறப்புற நடைபெற்றது.
-நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வன்னியூர் செந்தூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-பாடசாலையின் எதிரேயுள்ள நாகம்மாள் ஆலத்தின் முன்றலிலிருந்து விருந்தினர்கள்,அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் இன்னிய வரவேற்புடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
-மங்களவிளக்கேற்றல்,அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையினை பழையமாணவர் சங்கத்தின் ஆலோசகர் “சுதேச வைத்தியத் திலகம்” நா.வன்னியசிங்கம் அவர்கள் வழங்கினார்.
-பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் சார்பில் நிர்வாக உத்தியோகத்தர் திரு இந்திரகுமார் அவர்களும்,
-சிறப்பு விருந்தினர்களாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை அதிகாரி வைத்தியகலாநிதி திருமதி நிரேகா அவர்களும், துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ஜெயபாலன் அவர்களும் , ஒட்டுசுட்டான் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பங்கயச்செல்வன் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-கௌரவவிருந்தினர்களாக கற்சிலைமடு கிராம அலுவலர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வீரா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
-தலைமையுரை, ஆசியுரை என்பவற்றைத் தொடர்ந்து அதிபர் திரு.பன்னீர்ச்செல்வன் அவர்களின் சிறப்புக் கருத்துரையுடன்,விருந்தினர் உரைகளும் இடம்பெற்றது.
ஆசிரியர்கள் நினைவுப்பரிசில்,நினைவுக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
-ஆசிரியர்கள் சார்பில் தமிழ்ப்பாட ஆசிரியர் திரு.ரதீஸ்வரன் அவர்கள் அனுபவப்பகிர்வை வழங்கினார்.
-சாதனை அதிபர் பன்னீர்ச்செல்வன் அவர்கள் பழையமாணவர் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். பழையமாணவர் சங்கத்தின் பொருளாளர் வே.சிவகுமார்,முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.விஜயமோகன் ஆகியோர் அதிபருக்கான கௌரவத்தை வழங்கினார்கள்.
-நன்றியுரையினை பழையமாணவர் சங்கத்தின் ஆலோசகர் ,கிராம அலுவலர் திரு.நா.ரஞ்சிதகுமார் அவர்கள் வழங்கினார்.
நன்றியுரையினைத் தொடர்ந்து மதியபோசன விருந்துபசாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
~வன்னியூர் செந்தூரன்~