நேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி – சிவத்தமிழ் பத்திரிகையின் விருதும் விருந்தும் என்ற படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா இடம்பெற்றிருந்தது.
படைப்பாளிகளில் ஒருவனாக எனக்கும் விருது வழங்கி கௌரவித்தார்கள்.
எமது கல்லூரியான மகாயனக் கல்யூரியின் முன்னாள் அதிபரும் எனது விலங்கியல் பாட ஆசிரியருமான அமரர் திரு.பொ.கனகசபாபதியின் நினைவாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பழம்பெரும் எழுத்ததாளரும் என்னை அவரின் வாசகனாக்கியவருமான திரு.இந்து மகேசு அவர்களின் கையால் பெற்றுக் கொண்டமை இரட்டிப்பு மகிழ்ச்சியாகவிருந்தது
மதகுருமார்களின் ஆசியுரை எழுத்தாளர்களின் வாழ்த்துரை என்பதுடன் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.
வெற்றிணிப் பத்திரிகையில் இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் எழுதி வருகின்றார்கள். அவர்களும் கௌரவ விருது பெற்றிருந்தனர். அது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையாகவும் இருந்தது.
குறிப்பாக கவிஞர் நெடுந்தீவு முகிலனின் நெறியாள்கையில் „அந்தியில் உதயம்“ என்ற குறும்படம் அத்துடன் கொலை என்ற குறும்படம் சஞ்சயின் (வெற்றிமணியின் மகன்) உருவாக்கத்தில் உருவாகிய காதல் கதை கொண்ட காணோளியும் இடம்பெற்றது.
இவ்விழா ஒரு குடும்ப விழா போன்று கனகச்சிதமாக விருந்துடன் கலகலப்பாக இயல்பாக இடம்பெற்றமை மன நிறைவைத் தந்தது.
இன்னொரு சிறப்பம்சமாக இவ்விழாவின் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி அறிவிப்பாளராக கடமையாற்றியவர் அகரம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு.த.இரவீந்திரன் அவர்கள் .
இது பாராட்டப்படப்பட வேண்டிய விடயமே. சக பத்திரிகையாளனின் விழாவை நடத்திக் கொடுத்தமை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அகரம் சஞ்சிகை
ஆசிரியரையும் வெற்றிமணிப் பத்திரிகையின் ஆசிரியைரையும் உளமாரப் பாராட்டுகின்றேன்.