பூஞ்சோலை ஒன்று பூத்திருக்க
பூங்காற்று வீச மறுக்கிறது
பொன்வானம் பூத்தூவி செல்கிறது
வெண்ணிலாவோ முகம் காட்ட மறுக்கிறது
வானவில் அழகாய்தான் தெரிகின்றது
விழிகளோ அதை காண மறுக்கிறது
மாமழை சோ சோ என பொழிகிறது
மனமோ அதை இரசிக்கமறுக்கிறது
மனவறை பாலைவனமானது
மின்மினிகள் ஒளிதர மறுக்கிறது
கண்களில் கனவுகள் கலைந்துபோனது
கவிதைகள் வர்ணமிழந்து தவிக்கிறது
மனப்பறவை சிறகொடிந்து போனது
எண்ணங்கள் செயலற்று கலங்குகிறது
எல்லாமே விதியென்று அசரீரி கேட்கிறது
எழுதுகோல் தனிமையை நாடியே
அழைத்துச்செல்கிறது…
ஆக்கம் ரதிமோகன்