வானம் பார்க்க ஆசை
பல வண்ணம் பூசி
என் எண்ணங்களை
வானத்தில் பறந்திட வைக்க
ஆசை
மண்ணில் மிதக்கும்
நீர்த் துளிகளை
என் உணர்வுத் துளிகாய் மாற்ற
ஆசை
பணம் என்று ஓடும் மணிதர்களை
பாசம் என்ற போர்வைக்குள்
புகுத்த ஆசை
கண்ணில்லாத குருடனாய்
நான் பிறந்து
இருளின் இனிமைகளை
உரசிப் பார்க்க
ஆசை
ஊனமில்லாத உலகொன்றில்
நான் மட்டும் ஊனமாய் பிறக்க ஆசை
காற்றில் கலந்து
காலங்கள் மறந்து
பல பார்வைகள் பார்த்து
சில ஜென்மங்கள் வாழ
ஆசை
ஓலைக்குடிசையில் ஓரமாய்
சாய்ந்து ஓரக் கண்ணால்
முழு நிலவையும் நான்
ரசிக்க ஆசை
எத்தனை ஆசைகள் இருந்தாலும்
அத்தனையும் நிறைவேறுமா என்று
உள்ளத்தில் புதைத்தபடி
நான் இருக்கிறோன் நான் ஓர்
ஜடமாய்
பொத்துவில் அஜ்மல்கான்