நீதானே …கவிஞர் ரதிமோகன்

செங்கம்பள இதயத்தில்
செதுக்கி வைத்த ஓவியமாய்
செங்கமலகண்கள் நுழைந்த
சங்கத்தமிழ் கள்வன் நீதானே..

செஞ்சோற்று கடன் தீர்த்த
பரம்பரைதோன்றலென்று
சொற்பதமெடுத்து பொற்பதம் பற்றி
பைந்தமிழ் பாட வைத்தவன் நீ தானே

சிந்தனைகள் கற்பனைகள்
சீர் கொண்ட கவிதைக்குள்
சிக்கிய சாணக்கியனும் நீ தான்
உசிரு தந்த சஞ்சீவியும் நீ தானே

காலங்கள் போனாலும்
கோலங்கள் சிதைந்தாலும்
கல்லறையிலும் மலரும்
என் பொன் வசந்தம் நீதானே…,

ஆக்கம் ரதிமோகன்