***ஆவதும் அழிவதும் பெண்ணாலே ***கவிதை தாய்மைநேசன்

மூத்தவள் பெண்ணென்றால் இளையவனுக்கு
……..முத்தமிட இரண்டு தாய்மார் என்பர்
பெத்தவள் இருக்கைலேயே மூத்தவள் முடிந்தவரை

…….பிள்ளைவளர்ப்பை நன்கு பயின்றிடுவாள்
பெத்தவள் இறக்கையிலே மொத்தத்தில் மூத்தவளே

……..பாசத்தோடு தாயாகி பாரத்தை சுமப்பாள்
அத்தனை ஆசையோடு அக்காளை அனைத்து
…..ஆறுதலடைந்து அனுசரிப்பார் அன்போடு
வளர்த்தவள் வார்த்தைக்கு வாலிப வயது வரை
…….வாஞ்சையுடன் கட்டுப்பட்டு வாழுவர்,பின்
வந்தவள் வாய்ச்சொல் கேட்டு வளர்த்தவளை
……வாய்விட்டு வஞ்சகியாக வர்ணிப்பார்
பெத்தவளிடம் தம்மை தத்தெடுத்தவளை, தவறாய்
…….பேசி நிந்தித்து ,வந்தவளை வாழவைப்பர் .
பெத்தவள் வளர்த்தவள் வந்தவள் மூவரும் இங்கே
……..பெண்எனும் பார்புகழும் இனம் தானே.
சித்தர்கள் சொல்வர் ஆவதும் பெண்ணாலே
…….சிலர் அழிவதும் பெண்ணாலே என்று .
தாய்மைநேசன்