வடிவேலவா! உமைபாலகா!
மயிலேறி உலகாளும் சிவசண்முகா!
சிவசண்முகா! அருள்செய்யவா
திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா
சொல்லானவா பொருளானவா
தூயதமிழ் அன்னைக்கும் தாயானவா
தாயாகி எமக்கெல்லாம் தயைசெய்தவா
தயைசெய்து தன்னோடு எமைச் சேர்த்தவா
வடிவேலவா! உமைபாலகா!
மயிலேறி உலகாளும் சிவசண்முகா!
சிவசண்முகா! அருள்செய்யவா
திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா
நில்லாத நம்வாழ்வில் நிலையானவா
நிலையான வாழ்வுக்கு வழியானவா
வழியாகி ஒளியாகி வாழ்வானவா
வாழ்வுக்குப் பொருளான வடிவேலவா
வடிவேலவா! உமைபாலகா!
மயிலேறி உலகாளும் சிவசண்முகா!
சிவசண்முகா! அருள்செய்யவா
திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா
பலநூறு கோயில்கள் உனதல்லவா
பணிவோர்க்குப் பலநூறும் ஒன்றல்லவா!
ஒன்றாகிப் பலவான உறவல்லவா
உறவாகும் மனமெல்லாம் உனதல்லவா
வடிவேலவா! உமைபாலகா!
மயிலேறி உலகாளும் சிவசண்முகா!
சிவசண்முகா! அருள்செய்யவா
திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா
நின்றாடும் மயில் எந்தன் மனமல்லவா
நீ ஏறி விளையாட வா மன்னவா!
குன்றாடும் கோலமது போதும் போதும்
குமராநீ எமையாள வாரும் வாரும்!
வடிவேலவா! உமைபாலகா!
மயிலேறி உலகாளும் சிவசண்முகா!
சிவசண்முகா! அருள்செய்யவா
திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா
ஆக்கம்: -இந்துமகேஷ்