பிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில் வீடியோ மலர் ஒன்று மாதமாதம் அல்லது காலாண்டு மலராக வருவதாக திட்டமிட்டு யாழ் அரியாலை கலை நண்பர்கள் அண்ணன் அடங்காப்பிடாரி N,T.குணம் அவர்கள். மயிலு செல்வராஜா அவர்கள், ரொபேட் அவர்கள்,தொழில் நுட்பக்கலைஞர் சிவா அவர்கள், நடா அவர்கள், மற்றும் நான் (கே.பி.லோகதாஸ்) நண்பர் அரியாலையூர் P.கணேசலிங்கம் (துரை)அவர்களை ஆசிரியராக கொண்டு „கலைச்சுடர்“ என்று பெயரிடப்பட்டு வெளிவருவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்து.
ஆனால் அது தவிர்க்கமுடியாத காரணங்களால் வெளிவரவில்லை!
பின்னர் பிரான்ஸ் தமிழ் கலைஞர் ஒன்றியம் நண்பர் பிலிப்தேவாவை ஆசிரியராக கொண்டு „பாரீஸ் வீடியோ மலர் என்ற பெயரில் வெளிவந்து ஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.
அடுத்து பிரான்ஸில் கலைக்கோவில் அதிபர் அமரர் கிறகரி தங்கராஜா அவர்களைஆசிரியராக கொண்டு „சங்கமம் „என்ற வீடியோ சஞ்சிகையும்.
ஜேர்மனியிலிருந்து திரு.பாக்கியநாதன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு „கலைவிளக்கு“ என்ற வீடியோ சஞ்சிகையும் வெளிவந்தது.
நம்மவர்களின் 24 மணிநேர வானொலி தொலைக்காட்சி தோன்றாத காலத்தில் இவ் வீடியோ சஞ்சிகைகள் வெளிவந்து நமது கலைஞர்களின் கலைத்திறன்களை நம்மவர்கள் பார்த்து மகிழ பல புதிய கலைஞர்கள் உருவாக வழிசமைத்தது.
இந்த ஒளிப்படம் „கலைச்சுடர்“ வீடியோ சஞ்சிகைக்கு தயாரான „வாளும் விழியும் “ சரித்திர நாடகத்தயாரிப்பின் போது எடுக்கப்பட்டது. படத்தில் கே.பி.லோகதாஸ் :::::