சுவிட்சர்லாந்தின் ‚பேர்ண்‘ நகரில் இருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா அவர்கள் ‚முத்தமிழ் தாரகை‘ எனும் கெளரவம் அளிக்கப்பட்டார்
கனிமொழி தன்னிலே
தனிமொழியாம்
தமிழ்மொழி தன்னை
ஈர்பத்து ஆண்டுகளாய்
வேர்விடச் செய்த தமிழ்
ஊர் மங்கையே!
முத்தமிழையும்
சித்தமதில் வைத்து
சித்தி பெற்றவளே!
தமிழ் மாணவரை
சித்திபெற வைத்தவளே!
பனி நிறையிடத்தில்
தமிழ்
பணியால் நிறைந்தவளே!
கனி மொழியதிலே
தமிழ்
அணி கற்பித்தவளே!
மொழி ஊட்டி
நல்
வழி காட்டி
ஒளி கொடுத்து
தமிழ்
ஒலி தொடுத்து
மாணாக்கர்க்கு
மதி கொடுத்த தமிழ்
மதியே!
சிதைந்த தேசத்துறவுகட்கு
வெளித்தெரியாது
சேவைசெய்யும் உன்கரங்கள்
ஈழத்து மரத்திற்கு வரங்கள்.
மூன்று தமிழிலும்
ஊன்றிய உன்திறனுக்கு
‚முத்தமிழ் தாரகை‘
கிட்டியது மகிழ்ச்சி
மூத்தமொழி வாழ்விக்கும் நீ
காண்க தொடர் வளர்ச்சி.
யோ.புரட்சி