****என் கண்ணை வருடிய இறகே****கவிதை தூரிகைநேசன்

மண்ணைத் தொட்டுச் சென்ற உந்தன்
~மலர்ப்பாதங்கள் தானடி என்றும் எந்தன் ,
கண்ணை பறித்த கண்காட்சியாகியென்,
~கால்வாசிக்காதலை வளர்த்தது என்பேன்.
உன்னைப் படைத்த பிரமனே என்றும், இந்த
~உலகிலேசிறந்த விஞ்ஞானியும் என்பேன்.
தன்னையறியாதபடியும் புரியாதபடியும் பல
~தடைக்கதவுகளால் தாழிட்ட உள்ளத்தோடு
பெண்ணைப்படைத்த பெருஞானி எனவும்,
~பெயர் சூட்டுவேன் என்றும் அவனுக்கே .
உன்னை வருடிய இறகிலிருந்து வெட்கித்து
~உதிர்ந்ததூரிகை கொண்டுதானே நானும்
உன்னத ஓவியன் ஆனேனடி என் கண்ணே.

 

ஆக்கம் தூரிகைநேசன்