ஏதோ ஒரு ஞாபகம்!கவிதை நகுலா சிவநாதன்

தாயில்லா வாழ்விலே
தவித்திட்ட நாட்கள்
பூவில்லா வாசமாய்
பூத்தன காலங்கள்

சின்னவயதில் சிறைப்படுத்தி
தன்னம்பிக்கையை வரவழைத்து
முன்னேறிய காலங்கள்
முனைப்பாய் வேர்களாய்ப் படர்ந்தன

வழிகாட்டியற்ற வாழ்வுப்பயணத்தில்
திக்குத்திசை தெரியாது முக்குழித்த நாட்கள்
உதவிக்கு ஒருவரின்றி வாழ்ந்திட்ட பொழுதுகள்
வாடா மல்லிகையாய் வாசமிழந்து போயின

ஏதோ ஒரு ஞாபகம்
மின்னலாய் தெரிந்த கலங்கரைவிளக்கு
கண்ணிலே பளிச்சிட
காலங்கள் அதை நோக்கி விரைய

காவியங்கள் படைக்க துாண்டின
நம்பிக்கை ஒன்றே துடுப்பாய்
தன்னம்பிக்கை வழிகாட்டிட
இறையருள் துணைக்கு வர
இதமாய் ஒருவழிப்பாதை கண்டிட்டகாலம்
மறக்கமுடியாத ஞாபகமாய் மனதில்

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்

Merken