குலைக்கப்
பட்ட வாழ்வில்
பட்டுப் போகாத
நினைவுகள்….
கடல் தாண்டி
வந்த போதும்
உடல் தாங்கி
வந்த நினைவுகள் கோடி…..
அறியாப்
பருவமெனினும்
நினைவழியா
தடங்கள்….
நல்லூர் வீதி.
நாலு பக்கமும்
பக்த கோடிகள்
பரவசப் படுத்தும் கடைகள்…
கடலைக்
கடைகள்..
கடலை போடும்
இளம் தாரிகள்…
வட்டமடிக்கும்
வனிதைகள்
வாசம் பரப்பும்
மல்லிகைப் பூக்கள்…
கை கூடிய காதல்கள்.
எல்லோர்க்கும்
பிடித்த ரசணைக்
காரணிகள்..
தாகம் தீர்த்த
தண்ணீர் பந்தல்கள்…
இன்னிசைக்
கச்சேரிகள்
பண்ணிசை பாடி
பரவசமாக்கிய
தருணங்கள்….
சொல்ல முடியாத
சேட்டைகள்.
சேட்டை விட்டு
ஓடி ஒழிந்த பொழுதுகள்
இன்றும் இனிக்கிறது…
ஆக்கம் கவிஞர்தயாநிதி