முற்றுகை..கவிதை கவிஞர் தயாநிதி

கூடுகள்
கலைந்திட்ட
உறவுகள்.

தேடுவாரற்று
வீதிகளில்
அலைந்தனர்.

காடுகள்
தாண்டி விதியின்
பிடியில்….

காழ்ப்புணர்வு
கலைந்து
நான் நீ எனும்
பேதம் மறந்தனர்.

உயிரை
மட்டும் நெஞ்சினில்
சுமந்தனர்..

ஊன் உறக்கம்
ஒன்றாகவும்
நன்றாகவும்
நகர்ந்தன…

விடுதலையும்
விடியலும் மெய்ப்
பொருளாயின….

ஆனாலும்
அகிலம் தன்
கூத்தால் யாவும்
கலைத்தது..

விடுபட்டுப்
போனது விடுதலை
மட்டுமல்ல.மாறாக
மன மாற்றங்களும்..

உயிர்ப் பயம்
அகல பழைய பல்லவி
ராகம் இசைத்திட
சாதியம்
சீதணம்
நான் எனும்
பேய்களின்
கச்சேரி
கோவில்களில்….

ஆக்கம் கவிஞர்தயாநிதி