நிஜமென்று நம்பியதெல்லாம்
நிழலாகிப் போகக்கண்டேன்
இன்று நிழலோடு உறவாடுகிறேன்
நிஜமென்று அதனை நம்பியே..!
உறவென்ற பலரும்
உயிரென்ற சிலரும்
உருவம் அற்றுப் போகையில்
உருமாறிப் போகிறது மனதும்தான்..
அண்ணன் தமபி கூட
அன்பின் பிணைப்பெல்லாம்
பணத்தின் பின்னென்று
பாதிவழியில்தான் தெரிந்துகொண்டேன்..
உற்றவர்கள் என்றெண்ணியே
உயிராய் நானிருக்க
இன்னொன்ற வந்ததும்
எடுத்தெறிந்து போக
கொண்டதும் கொடுத்ததும்
மறந்து வாழக்கண்டு
மனம் உடைந்து போனேன்..
சலனம் உள்ள மனங்கள்
சகதியின்று தெரியாது
சாக்கடையாகிப் போனது
சலவையின்றி நாறுது..
ஓர் நாள் உலகம் அறியுமென்று
ஓர் நம்பிக்கை நானும்கொண்டேன்
ஒதுங்கியே வாழும் இந்த வாழ்க்கை
கல்லறை வரை கடக்குமோ
அறிந்தும் அறியாது
தெரிந்தும் தெரியாது
வாழ்க்கையைத் தொலைத்து
பிறர் மனங்களை காயங்கள் செய்து
வாழ்தல் நரகமன்றோ..??
வாழும் வரை
விழிப்போடு இரு
நிஜம் எது நிழல் எதுவென
தெரிந்தே கடந்து போ..//
ஆக்கம் ஜெசுதா யோ