ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து இன்று 19.07.2017 காலை 8 மணிக்கு நல்லூா் கந்தசுவாமி கோவிலில் வெளியிட்டு வைத்தது. இந்து கலாசார அமைச்சா் கௌரவ டி.எம். சுவாமிநாதன் நுலை வெளியிட்டு வைத்தாா். அதில் நானும் சிறப்புப் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்டேன்.
.
கந்தபுராண கலாசாரம் மேலோங்கிய எங்கள் மண்ணின் பல்வேறு தரப்பினரிடையேயும் இந்த நூல் சென்றடைய வேண்டும் என்பதற்காக ( 800 ரூபா) மலிவு விலையில் இதனை வழங்குகின்றனா். நல்லூா் ஆலய வாயிலில் உள்ள நாவலா் மணிமண்டபத்தில் அலுவலக நேரத்தில் பெறமுடியும்.
.
மாணவர் இந்நூலை வாசிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக நூலை மையப்படுத்தி மாணவரிடையே போட்டி ஒன்றை நடத்தவிருப்பதாக திணைக்களப் பணிப்பாளா் திரு அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தாா்.
.
காலத்தின் தேவையுணா்ந்து சேவைகளை முன்னெடுக்கும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தாருக்கும் பணிப்பாளருக்கும் நல்வாழ்த்துக்கள்.