யேர்மனி சுவற்றா கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.சிவ.ஜெயந்திநாத குருக்கள் அவர்களின் குடும்பத்தார் சார்பில் அம்பாள் புகழ்பாடும் இறுவெட்டுவெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக அமைந்தது. 16.07.2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு ஆலய மண்டபத்தில் மங்கலவிளக்கேற்றலுடன் தொடர்ந்து விநாயகப்பெருமான், அம்பாள் பூசையுடன் விழா இனிதே ஆரம்பமானது. கற்றிங்கன் பிரதமகுரு.முத்துசுவாமிகுரு அவர்களின் ஆசியுரையுடன் வரற்வேற்புரையினை ஆலய தலைவர்.சண்முகதாஸ் அவர்கள் இன்முகத்துடன் உரைநிகழ்த்த தொடர்ந்து இறுவெட்டு சிறப்புரையினை பேராசிரியர்.மூறோ அவர்களும் நிகழ்த்த இறுவெட்டு வெளியீடு செய்யப்பெற்றது. முதல்பிரதியை தொழிலதிபர்.வேங்கைமைந்தன் பெற்றுக்கொள்ள தொடர்ந்து அனைவரும் பிரதிகளை பெற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து ஆலய குரு அவர்கட்கு அகரம், தீபம் சஞ்சிகை மற்றும் Etr. தமிழ் வானொலி அதிபர் த.இரவீந்திரன் பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன அவ்வரிசையில். எசன் நுண்கலை அதிபர் நையினை விஜன், வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரன், அகரம் தீப சஞ்சிகை ஆசிரியர் இரவீந்திரன், கலைஞர் கற்றிங்கன் சிவம், கவிமாமணி கி.த.குகதாஸ், ஆலய நிர்வாகசபை உறுப்பினர் சு.கோபிநாத், மாகாண கல்விச்செயல்பாட்டாளர் நற்குணராஜா, ஆகியோர் சிறப்பாக வாழ்த்துரை வழங்க ஏற்புரையை ஆலய குரு.சிவஸ்ரீ.சிவ.ஜெயந்திநாதக்குருக்கள் மகிழ்வுடன் பகிர நன்றியுரையினை கலாதரன் அவர்கள் வழங்க விழா இனிது காண நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் முல்லை மோகன், அறிப்பாளர் தேவராஜா „கவிமாமணி „கி.த குகதாஸ்,அவர்களின் சிறப்பான தொகுப்புடன் விழா இனிதே நிறைவுகண்டது
.
கி.த.கவிமாமணி.