நட்புக்கு ஒர் கவி!கவிதை ஜெசுதா யோ

நட்புக்கு ஒர் கவி
எழுதிட விளைந்தேன் நானும்
எழுத எழுத தோன்றும்
எண்ணில்லாத வார்த்தைகள்
ஒன்றா,.? இரண்டா..?

நட்பென்ற மூன்றெழுத்தில்
புதைந்துள்ள அர்த்தம் உணர்ந்தேன்
பகைமறந்து பேசும் உறவும் நட்புத் தானே
பழியற்றுப் பழகும் உறவும் நட்புத்தானே
ஆபத்தில் ஓடோடி வந்து
தோள்கொடுப்பதும் தோழன் தானே

சொல்லமுடியாத சோகத்தையும் தோளில் சுமப்பவன் தோழன் தானே
மனம் விட்டுப் பேசி
மகிழ்வாக இருப்பதும் நட்பில் தானே
பிரிவுகள் பேதங்கள் பாராது
எல்லாம் ஒன்றென்று வாழ்வதும்
நட்பில் தானே

மரணங்கள் வந்தாலும்
மாறாது இருப்பது நட்பு தானே
நினைவுகளில் நினைத்து மகிழும் சொந்தம் நட்பு தானே
கவலை கூட இனிக்கும்
நட்பைக் கண்டால்
காதல் கூட கசக்கும்
நட்புக்காகவே,.
என்றும் உயர்வு நட்பென்றோ
அதில் வாழ்தல் சிறப்பன்றோ..

ஆக்கம் ஜெசுதா யோ