கட்டழகைக் காட்டி விட்டாள் – என்
கண்ணுரெண்டைக் கட்டி விட்டாள்
கனவுக்குள் கத்திச் சண்டை மெய்யாலும்
கண்டபடி என்னுயிரை கொல்லிறியே எந்நாளும்
விழி தொட்ட அழகை – என்
விரல் தொட்டு விட ஆசை
விடையிட்டு என்னை – நீ
அழைத்து விடு கிட்ட வாறேன் பேச
ஆப்பிள் கன்னம் அழகிய அதிரசம் – என்
ஆசைகள் அதிலே அதீத தீவிரம்
கட்டளையிட்டால் அது எனக்கொரு வரம்
கட்டியணைத்து முத்தம் பதிக்க தா ஒரு தரம்
மொட்டு விட்ட முல்லைகளில்
மொய்த்த விழியானதடி காயம்
முப்பொழுதும் கற்பனையில்
மூழ்குவதால் திட்டுதடி என்னிதயம்
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்