செல்லும் இடமெல்லாம்
சிறப்பு நல்கும்
கல்வியைக் கற்றிடு
உறங்கியது போதும்
காலத்தை கடத்தாது எழுந்திரு
உழைத்து முன்னேறு
உலகம் உன் கையில் புரிந்திடு !
உனக்காக வாழும் வாழ்விலும்
பிறருக்காய் கொஞ்சம் வாழ்ந்திடு
உலகம் உன்னைப் புரட்டிப்பார்க்கும்
அவமானங்களைக் கண்டு
ஆழ்ந்து போகாதே
அறிவால் நிலை நாட்டு
தோல்விஎன்று துவண்டு போகாதே !
வெற்றி உனதருகில் தான்
நாளை உன்கையில்
நம்பிக்கை வளர்த்துக்கொள்
நல்லதையே விதைத்துகொள்
நல்லதையே அறுபடை செய்வாய்
நாடு செழிப்புறும்
நாடே உன்னைத் தேடல் புரியும்
உன் கையில் எதுவுமில்லை என
பிறர் கையை பறிக்காதே
உன் கையில் எல்லாமே உண்டென
வெகுண்டெழு
உலகம் உன்னை அழைக்கும்!
உலகே உன் கையிலென
உயர்ந்திட பாரு
சிறு பான்மை மக்களை உயர்த்திட பாரு
வறுமை யென வதங்கிடாதே
!பொறுமையோடு நீயும்
வறுமையை போக்கிடு
உள் மனம் உரைக்கும்
உன் கையில் உலகம் என்று
ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்