பித்து மனம் உள்ளவளே கேளம்மா.. -நான்
பெத்த கடன் தீர்க்கலயே என்னைப் பாரம்மா..
பரிசுத்தமுள்ள வெள்ள மனம் தாயம்மா.. -எனை
பெத்த தவம் என்ன செய்தேன் நானம்மா..
ஒத்த வரம் கேட்டு என்னை பெத்தவளே
குத்தம் குறையின்றி என்னை காத்தவளே
இரத்தம் மாற்றி உணவாக தந்தவளே
பெத்த கடனை பார்க்காம வளர்த்தவளே
மொத்தத்தில மூச்சுத் தந்த ஆத்தா- என்னை
முத்தம் தந்து உன் உசிரா பாத்தா.. என்
சத்தத்தையும் சங்கீதமா கேட்டா..
சத்தியமா உன்னப்போல யாருமில்ல ஆத்தா..
தீர்க்கும் நோய்நொடியும் உன் வார்த்தை கேட்க..
தீர்த்தம் தாய் உந்தன் அன்பை பார்க்க..
சொர்க்கம் உன் காலடி தான் வாழ்க்கை..
தோற்கும் உன் காலடியில் இந்த இயற்கை..
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்