களைகளை களைவதெங்கனம்?கவிஞர் தயாநிதி

 

ஆட்சிப்
பிழைகள்
காட்சிப்
பிழைகள்
ஊரையடித்து
தம் உலையில்
போடும்
மந்திரிகள்.

தேசத்தின்
நாசதாரிகள்
வாக்கு நேரத்தில்
செல்வாக்காக
வந்து போவர்
ஐந்து வருடம்
வசதியில் மிதப்பர்.

தேசத்தின்
முதுகெலும்புகள்
விவசாயிகள்
இவர்கள்
சேற்றில் கால்
வைத்தால் தான்
அரசியல்வாதியும்
சோற்றில் கை
வைப்பான்…

ஆனாலும்
இவர்கள்
வயிற்றிலும்
கையை வைத்து
விடுகின்றனர்.
வாழ வைக்கும்
ஐீவன்களின்
சீவன் போவதும்
அறியாமல்
கதிரைக்காய்
உயிரை எடுப்பர்.

தலையிலே
கை வைத்தழும்
இவர்கள்
குறைகளை
யார் களைவர்.
வாக்காளர்
விழித்தால்
அரசியல் களைகளை
களையலாம்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி