***நமக்கு நாம் ***

தொட்டுணர்ந்து தாலியிட்டுத் தாரமாக்கி உன்னை
……தரணிபோற்றும் நல்ல தம்பதியானோம் பெண்ணே
நொட்டைநொடிசல் சொல்வது மாமியார்கள் கலை,
……..நோகடிப்பது மைத்துனிகள் வேலை, இது மரபுதானே!!
பட்டுத் தெளிவதில்த்தானே பரம சுகம் என்பார்கள்
…….பாராமுகமாக இருக்க கற்றுக்கொள் கண்ணே !!
தொட்டதுக்கெல்லாம் தொட்டில் குழந்தைபோல்
……..தேம்பியழுது நீயும் அப்பா அம்மா என்கிறாயே,!!
விட்டகலா உறவெண்று எண்ணித்தானே- நானும்
……..விரும்பிவேண்டி உன்னை இணைத்துக்கொண்டேன்
நட்டமோ நயமோ நான் உனக்கும் , நீ எனக்கும்,
…….நாலுபேர் வேண்டாம் ,நமக்கினி என்றிருப்போம்.
தாரநேசன்